Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பாக நடுரோட்டில் டாப்லெஸாக போராட்டம் நடத்தி இந்தியா முழுவதையும் கலவரப்படுத்தினார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என்று பலரும் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார் ஸ்ரீரெட்டி.

தன்னை ஏமாற்றியவர்களாக தமிழ், தெலுங்கு திரையுலகத்தின் முக்கியஸ்தர்களின் பெயர்களையெல்லாம் வெளியிட்டு அதிர வைத்தார் ஸ்ரீரெட்டி.

இதனால் நாளை ஸ்ரீரெட்டி யாரை கை காட்டப் போகிறாரோ.. என்ன சொல்லப் போகிறாரோ? யாரை காலி பண்ண போகிறாரோ என பீதியில் இருந்தது கோலிவுட் சினிமாவும், டோலிவுட் சினிமாவும்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷகிலாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டி தான் ஆடையை கழட்டி போராட்டம் நடத்தியது ஏன் என்பதை மனம் திறந்து பேசியுள்ளார்.

“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன், போட்டோஷூட் நடத்த வேண்டும் வாருங்கள் என அழைப்பார்கள். அதைக் காட்டுங்கள், இதைக் காட்டுங்கள், அப்படி காட்டுங்கள், இப்படி காட்டுங்கள், டிரெஸை தூக்குங்கள், பேண்ட்டை இறக்குங்கள் என அவர்களுக்கு என்னவெல்லாம் ஆசையோ அதையெல்லாம் செய்துவிட்டு, என் உடம்பையும் பார்த்துவிட்டு அனுப்பி விடுவார்கள். ஆனால் வாய்ப்பு மட்டும் கொடுக்க மாட்டார்கள்.

வாய்ப்பு கொடுப்பதாக கூறி அழைப்பவர்களும் தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். அவர் கேட்பதையெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி செய்தபோதும்கூட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். டாப் நடிகர்கள், டாப் இயக்குநர்கள்கூட படுக்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள்.

அவர்கள் எல்லோரும் பார்த்த என் உடம்பை எனக்கு நியாயம் கேட்டு காட்டினேன். அவர்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியது மட்டும் சரி.. நான் செய்தது தவறா? எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தினேன்..” என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

- Advertisement -

Read more

Local News