Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“காதலரை ஏன் திருமணம் செய்யவில்லை” – நடிகை ஸ்ருதிஹாசனின் பதில்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தனக்குத் திருமண பந்தத்தின் மீது பயமாக இருப்பதால்தான் திருமணம் பற்றியே தான் இதுவரையிலும் நினைக்கவில்லை” என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன், டாட்டூ கலைஞரான சாந்தனு என்பவருடன் லிவிங் டூ கெதரில் தன்னுடைய மும்பை வீட்டில் வசித்து வருகிறார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசனிடம் “காதலருடன் ஒன்றாக வசித்து வந்தும், ஏன் நீங்கள் இருவரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை..?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கையில், “எங்கே போனாலும் என்னோட மேரேஜ் பத்திதான் கேக்குறாங்க.. உண்மையில் எனக்குத் திருமணம் அப்படீங்கற  வார்த்தையில் எனக்கு பெரிசா நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது. அதனாலேயே, அந்த உறவுக்குள் நுழைய நான் அதிகம் யோசித்து வருகிறேன்.

இத்தனைக்கும் என்னுடைய வாழ்க்கையில் சாந்தனு உள்ளே வந்ததும் நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது. நான் இப்போது ஆசிர்வதிக்கப்பட்டவளாகவே உணர்கிறேன். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய விஷயங்கள் ஒத்து போகிறது.

அதற்காக எனது அம்மா, அப்பாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டதன் காரணமாக நான் இப்படி யோசிக்கிறேன்னு அர்த்தமில்லை..” என்றார்.

- Advertisement -

Read more

Local News