நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு, ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர், அவர் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய படத்திற்கான கதையை தேர்வு செய்யும் பணியில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனராம். சமீபத்தில் இயக்குநர் எச். வினோத் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது கதையை கூறியதாகவும். அதேபோல், ‘சித்தா’ மற்றும் ‘வீர தீர சூரன்’ திரைப்படங்களை இயக்கிய அருண் குமார் என்பவரும் ரஜினியிடம் தனது கதையைச் சொல்லியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், வெங்கட்பிரபு என ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வலம் வந்தாவாரு இருந்தன.
இருப்பினும், இவர்களில் யார் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவிருப்பவர் யார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.