பா.ரஞ்ஜித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஜன.26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். விக்ரம் நடிக்கும் 62-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திருத்தணி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் இன்னும் வெளியாக வில்லை.