Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிலவரம் என்ன? வெளிவந்த புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள ‘பென்ஸ்’ எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ போன்ற படங்களைப் போலவே, ‘பென்ஸ்’ படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) னில் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தநிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News