Thursday, April 11, 2024

“வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா..?” – கவிஞர் விவேக்கின் பதில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே….’ என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்தப் பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி மானசி பாடியிருந்தனர். இந்தப் பாடல் இதுவரை 4 கோடி பார்வையாளர்களை சென்று அடைந்துள்ளது. ஆனால் கூடவே இந்தப் பாடல் மற்றும் நடனம் குறித்து சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் போட்ட நடன அசைவுகளை அப்படியே காப்பி அடித்துள்ளார் நடன இயக்குநர் ஜானி என்று சொல்லி 2 பாடல்களையும் ஒப்பிட்டு வீடியோக்களை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் 1994-ம் ஆண்டில் வெளியான ‘உளவாளி’ படத்தில் இடம் பெற்ற ‘மொச்ச கொட்ட பல்லழகி.. முத்து முத்து சொல்லழகி…’ என்ற பாடலின் மெட்டும் இந்த ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலின் மெட்டும் ஒரே போல உள்ளது எனவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு ‘ரஞ்சிதமே’ பாடலை எழுதிய கவிஞர் விவேக் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு மெட்டை தொடர்ந்து பல மெட்டுக்கள் அதுபோல உருவெடுக்கும். ‘மொச்ச கொட்ட பல்லழகி…’ என்ற பாடல் 1990-களில் வெளியானது.. அதன் பின்னர் ‘சிலம்பாட்டம்’ படத்தில் ‘பார்ட்டிக்கு போகலாமா..’ என்ற பாடலும் ‘தர்மதுரை’ படத்தில் ‘மக்க கலங்குதப்பா…’ ஆகிய பாடல்களும் இதே போல இருக்கும்.

நான் ‘வாரிசு’ படத்தில் வசனங்களையும் எழுதியுள்ளேன். எனவே ‘ரஞ்சிதமே’ பாடலை எழுதும் போதும் இந்த ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலை தமனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டே காட்சிகளை வைத்தோம். ‘மொச்ச கொட்ட பல்லழகி’ என்ற பாடலுக்கான காரணத்தையும் காட்சிகளாக வைத்துள்ளோம். படம் வரும்போது புரியம்.” என்றார் விவேக்.

- Advertisement -

Read more

Local News