Thursday, April 11, 2024

என்னதான் ஆச்சு தில் ராஜுவுக்கு?‌அடி மேல் அடி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் ஒரு முக்கிய நபரான தில் ராஜூ தன்னை ஒரு முக்கிய தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில், அவர் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அவரது பேசிய பேச்சு வரவேற்பை பெற்று வைரலானது.இந்நிலையில் அவரது தயாரிப்புகளுக்கு ஏற்பட்டு வரும் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளை அவர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தில் ராஜு படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து அசத்தி வருகிறார்.அவரின் ஆளுமையால் ஆந்திராவில் பல தியேட்டர்கள் அவரின் கைவசம் தான் இருக்கின்றன.தில் ராஜு 2003 ஆம் ஆண்டு ஸ்ரி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வைத்து தில் என்ற படத்தை தயாரித்து இருந்தார்.அதை தொடர்ந்து ஆரியா , பாத்ரா மற்றும் முன்னா போன்ற படங்களை தயாரித்து தனக்கென சினிமாவில் பெரும் தயாரிப்பாளராக ஒரு இடத்தை பிடித்தார்.

இவரின் தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துவ்வாடா, ஜகன்னாதம், ஃபிடா, வெள்ளிபொமேக்கி, ராஜா தி கிரேட், மிடில் கிளாஸ் அப்பாயி என இவ்வளவு வெற்றி படங்களை தந்தாலும் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜானு, வி, வக்கீல் சாப், ஷாதி முபாரக், F3, Thank you, நடிகர் விஜய் நடித்த வாரிசு போன்ற படங்கள் பெரிதும் வெற்றி பெறாமல் போயின.

எப்படியாவது ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட வேண்டும் என்ற இறங்கிய தில் ராஜு மீண்டும் சற்று சரிவையே சந்தித்தார். அவருடைய மருமகனான ஆஷிஷ் நடிப்பில் ரவுடி பாய்ஸ் படத்தை தயாரித்தார்.ஆனால் அந்த படம் மிகவும் குறைந்த வசூலை ஈட்டியது.ஆஷிஷின் இரண்டாவது படமான செல்ஃபிஷ் என்ற படம் ஏனோ சில பிரச்சனைகள் காரணமாக திரைக்கு வராமல் உள்ளது.இப்படி தயாரிப்பாளராக தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளார் தில் ராஜு.

ஆனால், என்னதான் தயாரிப்பாளராக தில் ராஜு தோல்விகளை எதிர்கொண்டாலும் பட விநியோகத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறார்.சரியான கதைகளை தேர்வு செய்யாமல் முடிவு எடுப்பதே இவரின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவரின் தயாரிப்பில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் தில் ராஜு.

- Advertisement -

Read more

Local News