Touring Talkies
100% Cinema

Thursday, June 19, 2025

Touring Talkies

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டதா ‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமம்? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கூடுதலாக பாலிவுட் நடிகர் அமீர்கான், கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். மேலும் நடிகை பூஜா ஹெக்டே ஒரு சிறப்பு பாடலுக்காக நடனமாடியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, ஐதராபாத், ஜெய்ப்பூர், விசாகபட்டினம் உள்ளிட்ட நகரங்களிலும், சில வெளிநாடுகளிலும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது படம் போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் இருக்கிறது. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலை இந்த வார இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில்லாத மிகப்பெரிய தொகையாக இது கருதப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News