Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

வீர தீர சூரனின் ‘பாகம் 2’ என்ற தலைப்புக்கே காரணம் விக்ரம் சார் தான் – இயக்குனர் SU அருண்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன் – பாகம் 2’ திரைப்படம், வரும் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசும் போது, இயக்குநர் அருண்குமார் கூறியதாவது: “இவ்வளவு நல்ல மனசுள்ளவர்களுடன் வேலை செய்வது யாருக்குதான் வேண்டாம்? நான் மதுரை சிந்தாமணி தியேட்டரில் ‘தூள்’ படத்தை போலீஸ் அடிவாங்கியும் பார்த்தவன். இன்று அதே நடிகரான விக்ரமுடன் ஒரு படம் இயக்குகிறேன். இது அவருடைய 62வது படம். ஆனால் இன்னும் அவர் எதை எப்படி செய்யணும் என்று கேட்டுக்கொள்கிறார்.

இந்த மாதிரியான வாய்ப்பு எனக்கு முன்பே வந்திருந்தாலும், இப்போது தான் அது நிறைவேறுகிறது. நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த கி.கி-யை பார்த்ததும், எனக்கு அந்த நாட்களில் நான் கனவுகளோடு இருந்த இயக்குநர் காலம் ஞாபகம் வருகிறது. அதே சிந்தாமணிதான். அந்த நேரத்தில் நான் ‘நியூ’ படம் பார்த்தவன். இப்போது எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இயக்கியிருக்கிறேன். விக்ரம் சாருடன் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்பதும் என் விருப்பம். அவரிடம் இருந்து இன்னும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

இந்த படம் இரண்டாம் பாகமாகும். எனவே சீக்கிரம் திரையரங்குகளுக்கு வந்து பாருங்கள். இந்த ‘பாகம் 2’ என்ற தலைப்புக்கே காரணம் விக்ரம் சார் தான். நான் பல தலைப்புகளை பரிந்துரைத்தேன். ஒரு நாள் அவர் வீட்டில் சாப்பிடும் போது இந்த தலைப்பை சொன்னேன். உடனே, ‘இது சூப்பர் இருக்கு, இதையே வச்சுடலாம்’ என்று கூறினார். அந்த எண்ணத்தை விதைத்தவர் அவரே” என உருக்கமாக தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News