“ரஜினி  கேட்டது ஒரே ஒரு முறைதான்!”: வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

ரஜினியின் மெஹா ஹிட் படங்களில் ஒன்று அண்ணாமலை. இப்படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

அவர், “அண்ணாமலை திரைப்படத்திற்கு நான் பாடல்கள் எழுதி, கிட்டத்தட்ட முடித்துவிட்டேன்.  ‘கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்ன பூ… குஷ்பூ’  என பல்லவி எழுதிவிட்டேன். உடனே எல்லோரும், ‘குஷ்பூ பேர் பாடலில் வருகிறதே, நல்லா இருக்குமா’ என்று கேட்டார்கள். நான், ‘அதெல்லாம் நல்லா வரும், தியேட்டரில் விசில் பறக்கும்’ என்று கூறினேன்.

தவிர, கவியரசர் கண்ணதாசன் ‘அம்பிகாபதி’ படத்தில் ஒரு பாடலில், அதில் நடித்த நடிகை பானுமதியின் பெயரைச் சாமர்த்தியமாக சேர்த்ததைச் கூறினேன்.

அப்போது அங்கு வந்த ரஜினிகாந்த் பாடல் குறித்துக் கேட்டார். குஷ்பூ பெயர் பாடல் இடம்பெற்றிருந்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ரஜினி, ‘என்னுடைய பேர் வருமா’ என்று கேட்டார்.

அதன் பின்னர் தான்  ‘என்றும் நீ ராஜா நீ ரஜினி’ என்ற வரிகளை சேர்த்தேன்.   என்னிடம் ரஜினி வாய்விட்டு கேட்ட ஒண்ணே ஒண்ணு இதுதான்” என்றார் வைரமுத்து.