கமலுக்கு நிகரானவர் வடிவேலு!

தனது நடிப்பால், உலக நாயகன் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆனார் கமல்ஹாசன். அவருடன், நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்தூர் வில்சன். இவர், அன்பே சிவம், ரன், புலிகேசி உள்ளிட்ட பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.வடிவேலுவை பற்றி இவர் வீடியோ பேட்டி ஒன்றில் பேசும் போது, “நடிப்பில் கமல் அளவுக்கு.. ஏன், அவருக்கு நிகராகவே வடிவேலுவை நான் கருதுகிறேன்.  ஏனெனில் கமல் போலவே, எந்த ஒரு சீனையும் உடனே உள்வாங்கி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் வடிவேலு. தவிர, கமல் போலவே, எந்த சீன் எவ்ளவு நேரத்திற்குள் எடுத்தால் ரசிகர்களிடம் நல்ல முறையில் சென்றடையும் என்று அறிந்தவர்.  அது மட்டுமல்ல.. கமல்போலவே  வடிவேலுவுக்கு எடிட்டிங் வேலைகளும் தெரியும்” என்றார் ஆர்தூர் வில்சன்.