தீபாவளிக்கு ரஜினியுடன் மோதப்போவது யார்?!

வரும் தீபாவளிக்கு சரவெடியாக கோலிவுட்டின் டாப் 3 நடிகர்களின் படங்கள வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது. அடுத்து, விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் தல 62 திரைப்படமும் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனால், மூன்று பெரிய ஸ்டார்கள் மோதும் சரவெடி தீபாவளியாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், விஜய் நடிக்கும் படம், தீபாவளிக்கு முன்னதாக ஆயுதபூஜை அன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.