Wednesday, April 10, 2024

திரைப்பட விமர்சனம்: தூக்குதுரை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கைலாசம் என்ற கிராமத்தில் கோயில் சிலையின் கிரீடத்தை பாதுகாத்து வருகிறார் ஜமீன்தார். ஆனால் அது போலியான கிரீடம் என்பது தெரிய வருகிறது. அப்படியானால் உண்மையான கிரீடம் எங்கே.. அதை கண்டு பிடித்தார்களா என்பது கதை.

பட விளம்பரங்களில் யோகிபாபுவுக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தாலும், படத்தில் சில காட்சிகளே வருகிறார்.

ஜமீன்தார் மகள் இனியாவை யோகிபாபு காதலிக்கிறார்.  ஜமீன்தார் ஆட்கள் யோகிபாபுவை, கிணற்றில் தள்ளி கொலை செய்துவிடுகிறார்கள். அந்த கிணற்றில்தான், காணாமல் போன கிரீடம் இருக்கிறது. அதை எடுத்து, கோயிலில் வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் கிராம மக்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

யோகிபாபு காமெடியன் மட்டுமல்ல.. சிறந்த நடிகரும்கூட என்பதை மண்டேலா உள்ளிட்ட படங்கள் நிரூபித்து உள்ளன. ஆனால் அவருக்கு அச்சு பிச்சு வசனங்களை கொடுத்து எரிச்சல் ஏற்படுத்துகிறார்கள் இந்த படத்தில். காதலியுடன் ஊரைவிட்டு ஓடுகிறார் யோகிபாபு… காதலியின் ஊர்க்காரர்கள் கொலை வெறியுடன் துரத்துகிறார்கள். உயிர் பயம் வெளிப்படவேண்டிய அந்த காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் யோகிபாபு ஏதேதோ பேச.. முடியலை!

மொட்டை ராஜேந்திரனும் வீணடிக்கப்பட்டு உள்ளார்.  கதையில் ஏற்படும் திடுக் திருப்பங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதைவிட எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.

இயக்குனர் டெனிஸ், முன்பு ஒரு பேட்டியில், படம் ஒரு அரச குடும்பத்தைச் சுற்றி வருகிறது என்றும், அந்தக் குடும்பம் கைலாசம் கிராம மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம் என்றார்.

உண்மைதான். ஆனால் இதில் சுவாரஸ்யம்தன் மிஸ்ஸிங்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், முத்தழகு போன்ற தொடர்களில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மகேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.

ரவிவர்மா கே ஒளிப்பதிவு செய்ய, கே எஸ் மனோஜ் இசையமைத்துள்ளார்.

மொத்தத்தில் படம் சுமார்.

 

- Advertisement -

Read more

Local News