அந்த பாட்டுக்கு இந்த பாட்டுதான் காரணம்!

விஜயின் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’.  படத்தில் இடம்பெற்ற  அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் ரொம்பவே பிரபலம்.

ஆனால் இந்த ஜாலியோ ஜிம்கானா என்ற வார்த்தைக்கு பின்னால் ஒரு வரலாறே(!) இருக்கிறது. மறைந்த  இயக்குனர் ஸ்ரீதர் உருவாக்கத்தில் சிவாஜி கணேசன் பத்மினி த படம் ‘அமரதீபம்’.  இசை அமைத்தவர், டி.சலபதிராவ். பாடலாசிரியர் இராமையாதாஸிடம் வரிகளை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு இராமையா ‘ நம்புனா நம்புங்க நம்பாட்டா போங்க’ என்ற வரிகளை சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீதரோ, “இது தான் என் முதல் படம். இப்படி அபச குணமாக சொல்லுறீங்களே? ஏதாவது ஜாலியா சொல்லுங்கள்” என்று கேட்டார்.

உடனே ராமையாதாஸ், ஜாலி என்ற வார்த்தையையே பயன்படுத்தி, “ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா’என்ற வரிகளை சொல்ல ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அந்த ஜாலிலோ ஜிம்மானா வரிகள்தான் பல வருடங்கள் கழித்து விஜய் படத்திலும் ஒலித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.