நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர். திருமணம், விவாகரத்து மற்றும் உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால், குறிப்பிட்ட சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஹிந்தி திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். “பேமிலி மேன்” மற்றும் “சிட்டாடல்” போன்ற வெப் தொடர்களில் நடித்தவர், இப்போது மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்கிறார். இதுதவிர, தயாரிப்பு துறையிலும் கால் பதித்துள்ளார்.
சமந்தா சிட்னியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, சிட்னிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றி அவர் கூறியதாவது: “15 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில், சிட்னி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நிறைவேறவில்லை” என்று தெரிவித்தார்.