கிராமிய பாடகர் செந்தில் கணேஷ் மேடைகச்சேரி, சினிமா பாடல் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மனைவி ராஜலெட்சுமியுடன் சூப்பர் சிங்கர் 6 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்கள் அதன் பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள்.
இவர்கள் காதல் கதை பற்றி செந்தில் ஒரு பேட்டியில் பகிந்து கொண்டார். மேடைகச்சேரி மூலம் அறிமுகமான ராஜலெட்சுமி மீது எனக்கு காதல் வந்தது.
இருவரும் போனில் பேசி பழகினாலும் காதல் சொல்ல தயங்கினேன். என் தங்கையிடம் ராஜலெட்சுமியை நான் காதலிப்பதை சொல்லி அவரிடம் சொல்ல சொன்னேன். அதன் பிறகு ரொம்ப நாள் கழித்து தான் ராஜலெட்சுமி ஓகே சொன்னார் என்றார் செந்தில் கணேஷ்.