எம்.ஜி.ஆரை அதிர வைத்த வீட்டு உரிமையாளர்!

எம்ஜிஆர் தமிழ் திரையுலகில் மாபெரும் சக்தியாக  விளங்கியவர்.   ஆனால் சாதாரணமாக அந்த இடத்துக்கு அவர் வரவில்லை ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமான காலகட்டதைக் கடந்தார்.

நாடகங்களில் நடித்து வந்த அவர், முதன் முதலில் நடித்த படம், பணக்காரி. டி அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எம்ஜிஆர் தனது தாய் மற்றும் சகோதரர் எம்ஜி சக்கரபாணியுடன்  ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனக்ய

அந்த வீட்டின் உரிமையாளராக இருந்தவர் வக்கீலான ராம் என்பவர். மாதம் 250 ரூபாய் வாடகை கொடுத்து வீட்டில் வசித்து வந்த எம்ஜிஆரிடம் உரிமையாளர் நீங்கள் மாதம் 250 வீதம் வருடத்திற்கு தோராயமாக 3000 ரூபாய் செலுத்தி வருகிறீர்கள். இப்படியே இன்னும் கொஞ்ச நாள் போனால் வீட்டின் மதிப்புள்ள தொகையையும் கொடுத்து விடுவீர்கள் என்பதால் இந்த வீட்டை உங்களுக்கே தருவதாக நினைக்கிறேன்.

ஆனால் நீங்கள் வருடத்திற்கு 3000 க்கு பதிலாக 9000 ரூபாய் கொடுத்தால் 4 மாதத்தில் இந்த வீட்டின் மொத்த தொகையையும் கொடுத்து விட்டால் உங்களுக்கே இந்த வீட்டை தருகிறேன் என்றார்.

இது எம்.ஜி.ஆருக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. ஆனால்  மாத வாடகை  250 ரூபாயையே ஏற்பாடு செய்யமுடியாமல் தவிக்கும் நேரத்தில் எப்படி 9000 ரூபாய் வருடத்திற்கு கொடுக்க முடியும் என நினைத்தார்.

அதன் பின் இப்படியே ரூ.250 வாடகை கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில்  36000 ரூபாய் தொகையையும் கொடுத்து விட்டார். உடனே வீட்டு உரிமையாளர், எம்.ஜி.ஆர். பெயருக்கு வீட்டை எழுதிக் கொடுத்தார். இது எம்ஜி.ஆருக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

எம்ஜிஆர்  ஒரு கட்டுரையில,  வீட்டை நாங்கள் வாங்குவதற்கு பட்ட கஷ்டத்தை விட எங்களால் முடியும் என்று எங்களை ஊக்கப்படுத்திய அந்த உரிமையாளர் தான் உயர்ந்து நிற்கிறார் என்று பெருமையாக கூறியிருக்கிறார்.

இதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்