மருத்துவத் துறையை மையப்படுத்திய கிரைம் திரில்லர் வகையில் உருவாகி இருக்கும் படம் ‘அதர்ஸ்’. ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிப்பில், ஜி. கார்த்திக் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து நடிகர் ஆதித்யா மாதவன் கூறும்போது, “நான் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மருத்துவத் துறையில் நடக்கும் ஒரு முக்கிய குற்றச் செயல்மீது உருவாகிய கதை இது. இதில் சமூக கருத்துகளும் அடங்கியுள்ளன. மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்ற அனுபவம், சண்டைக் காட்சிகளில் எனக்கு பெரிய பலனாக இருந்தது. காக்கிச்சட்டை அணிந்தபோது ஏற்பட்ட உணர்ச்சி சொல்ல முடியாதது. கவுரி கிஷனுடன் நடித்த சில காட்சிகள் மிகவும் சவாலானவை. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட பதற்றத்தை நான் மட்டுமே உணர்ந்தேன்,” என்றார்.
இயக்குனர் அபின் ஹரிஹரன் கூறுகையில், “படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லை. அதனால்தான் காதல் காட்சிகளையும் குறைத்து வைத்தோம்,” என்று தெரிவித்தார்.