எண்ணற்ற வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடித்ததில் அவருக்கு மிகப் பிடித்த கேரக்டர் எது?
ஒரு பேட்டியில் அவர், “முதல் கதாபாத்திரம் கப்பலோட்டிய தமிழன் நடித்த வ.உ.சி.பிள்ளை கதாபாத்திரம், இந்தப் படத்தை பார்த்த வ.உ.சியின் மகன் வந்து என் அப்பாவையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் என்று சொன்னது தான் மிகப்பெரிய விருதை கொடுத்ததை போல உணர்வை ஏற்படுத்தியது.
அதற்கு அடுத்தப் படியாக சம்பூரண ராமாயணம் படத்தில் நடித்த பரதன் கதாபாத்திரம். அந்தப் படத்தை பார்த்து ராஜாஜியே நேரிடையாக பாராட்டினார். இதற்கு அடுத்து அப்பர் கதாபாத்திரம் மற்றும் பாசமலர் படத்தில் ஏற்று நடித்த அண்ணன் கதாபாத்திரம்” என்று சொல்லி இருக்கிறார் சிவாஜி.
இதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தெரிவித்தார்.