தமிழில் விஜய் ஆண்டனி நடித்த ‘கொலை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதன் பிறகு கடந்த வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன்படி ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘மட்கா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார். சமீபத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்த ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் நடித்தார். இந்த படம் சிறந்த வசூல் சாதனையை நிகழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மீனாட்சி சவுத்ரி ‘அனகனக ஓக ராஜு’ என்ற புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துவருகிறார்.
இந்நிலையில், மீனாட்சி சவுத்ரி பாலிவுட் சினிமாவிலும் தனது பயணத்தை தொடங்க உள்ளார். அதாவது ‘ஸ்த்ரீ’, ‘மிமீ’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த தினேஷ் விஜன் தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகங்களை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கால் வைக்க உள்ளார் என்பதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் இது மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.