விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்துக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந் நடிப்பில் கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘கூலி’. இதில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ஹாலிவுட் ரிப்போர்டர் மீடியா சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில்ஃ ‘கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன். அதன் பின்னர் ‘விக்ரம் 2’ மற்றும் ‘ரோலக்ஸ்’ என தொடர்ந்து படங்கள் உள்ளன. அவை நேரத்தைப் பொருத்தே அமையும்.
நிச்சயமாக அமீர் கான்-ஐ வைத்து படத்தை இயக்கவுள்ளேன். அந்த படம் இந்திய சினிமாவை தாண்டி உலக தரத்தில் இருக்கும். ‘கூலி’ படத்தில் அவரின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவை மிகவும் வலிமையானவை என கூறியுள்ளார்.