இன்று நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டாடாதவர்களே இல்லை. சிறுவர் முதல் பெரியவர்வரை அவரை விரும்புகிறார்கள். தொலைக்காட்சி, யுடிப் சேனல்கள் அவரது பேட்டிக்காக காத்திருக்கின்றன.
ஆனால் ஒரு காலத்தில், சிவகார்த்திகேயனை பிரபல சேனல்கள் ஒதுக்கின.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தெரிவித்தார், இயக்குநர் பாண்டிராஜ்.
“மெரினா படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஆகியோரை நடிக்கவைத்தேன். படம் முடிந்து பிரமோசன் செய்ய வேண்டிய நேரம்.
பி.ஆர்.ஓ. நிகில் முருகனும் நானும் சிவகார்த்திகேயனை அழைத்துக்கொண்டு டி.வி. சேனல்களுக்குச் சென்றோம். ஆனால் எந்த சேனிலிலும் சிவகார்த்திகேயனை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
அப்போது அவர் விஜய் டி.வி.யில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருந்தார். ஆகவே போட்டி சேனலில் பிரபலமானவரை நாம் ஏன் பிரமோட் செய்ய வேண்டும் என பிற சேனல்கள் ஒதுக்கின” என்றார் பாண்டிராஜ்.
இந்த சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/shorts/mux1JKFjHyM