விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..!

இயக்குநர் வி.சி.வடிவுடையன் இயக்கத்தில் நடிகர் ஜீவன், நடிகை மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம்பாட்டம்’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது “தன்னை மதிக்காமல் கதாநாயகி என்று அங்கீகாரம் கொடுக்கவில்லை” என்று நடிகை சாய் பிரியா மேடையில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

சாய் பிரியா மேடையில் பேசும்போது இயக்குநரைப் பார்த்து, “இந்தப் படத்தில் என்னை ஹீரோயின்னு சொல்லித்தான ஸார் என்னை கமிட் செய்தீர்கள். மல்லிகா மேடம் அரசியா நடிச்சாங்க. நான் இளவரசியா நடிச்சிருக்கேன். ஆனாலும் என்னை நீங்க ஏன் கார்னர் செய்றீங்கன்னு எனக்குத் தெரியவில்லை. பெயர் போடும் இடத்தில் என் பெயர் காணாமல் போயுள்ளது. இதை நான் யாரிடம் போய் சொல்றது..?” என்று பேசினார்.

இதன் பின்னர் நடிகை சாய் பிரியா செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் இந்தப் படத்தில் இளவரசியா நடிச்சிருக்கேன். ஆனாலும் என் பெயரை பிரிண்ட் செய்ய மறந்துட்டேன்னு சொல்றாங்க.. இதைத்தான் நான் இயக்குநரிடம் கேள்வியாகக் கேட்டேன்…” என்றார்.