Saturday, September 21, 2024

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் – பிரகாஷ்ராஜ் அணி படுதோல்வி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் மஞ்சு விஷ்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ அமைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது வழக்கம். அந்த வகையில் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு அணியும், நடிகர் மஞ்சு விஷ்ணு தலைமையில் ஒரு அணியும் மோதின.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தெலுங்கு ‘மா’ நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பல முக்கிய, பிரபல நடிகர், நடிகைகளும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.

இதன்படி தகுதியுள்ள மொத்த வாக்குகள் – 883

பதிவான வாக்குகள் – 605

தபால் வாக்குகள் – 60

மொத்த வாக்குகள் – 665

இன்று மாலை வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதன்படி இந்தச் சங்கத்தின் பெரும்பாலான பதவிகளை மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணியே கைப்பற்றிவிட்டது.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விஷ்ணு மஞ்சு பிரகாஷ்ராஜை தோற்கடித்து புதிய தலைவரானார்.

துணைத் தலைவராக நடிகர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற நடிகரும், முன்னாள் மாநில அமைச்சருமான பாபு மோகன் தோல்வியடைந்தார்.

சங்கத்தின் செயலாளராக நடிகர் ரகு பாபு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை ஜீவிதாவை 7 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிவ பாலாஜி, நடிகர் நாகி நீடுவை தோற்கடித்தார்.

செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்

நடிகை அனுசுயா (பிரகாஷ்ராஜ் அணி)

சிவ ரெட்டி (பிரகாஷ்ராஜ் அணி)

கெளசிக் (பிரகாஷ்ராஜ் அணி)

சுரேஷ் கொண்டெட்டி (பிரகாஷ்ராஜ் அணி)

பூஜிதா (மஞ்சு விஷ்ணு அணி)

ஜெயவாணி (மஞ்சு விஷ்ணு அணி)

ஜெ.சஷாங்க் (மஞ்சு விஷ்ணு அணி)

பி.சீனிவாசலு (மஞ்சு விஷ்ணு அணி)

ஸ்ரீலட்சுமி (மஞ்சு விஷ்ணு அணி)

மாணிக் (மஞ்சு விஷ்ணு அணி)

ஹரிநாத் பாபு (மஞ்சு விஷ்ணு அணி)

விஷ்ணு போப்பனா (மஞ்சு விஷ்ணு அணி)

- Advertisement -

Read more

Local News