Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 10-ம் தேதியன்று நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைவரான நடிகர் நரேஷ் தெரிவித்துள்ளார்.

2 வருடங்களுக்கு ஒரு முறை தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

தேர்தல் தேதி மட்டும் இதுவரையிலும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்ட 21 நாட்களுக்குப் பிறகு தேர்தல் நாளை வைத்துக் கொள்ளலாம் என்று மா அமைப்பின் சட்ட விதிகள் சொல்வதால் செப்டம்பரிலேயே தேர்தலை வைத்துக் கொள்ளலாம் என்று வரும் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆலோசனை தெரிவித்திருந்தார்கள்.

ஆனாலும் இந்தக் கொரோனா காலக்கட்டத்தை நினைவில் ஒரு மாதம் தள்ளி வைத்து அக்டோபர் 10-ம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தலை நடத்துவதாக அந்த அமைப்பின் நிர்வாகக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

வரும் தேர்தலில் 4 அணிகள் போட்டியிட வாய்ப்புள்ளன. நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஷ்ணு மஞ்சு, நடிகை ஹேமா, நடிகர் நரசிம்மராவ் என்று நான்கு பேர் தலைமையில் அணிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் தனது அணியினரை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டார். மற்றவர்கள் இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

இந்தத் தேர்தலில் நான்கு அணியினருமே ‘மா’ அமைப்புக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவது ஒன்றை முன் வைத்தே ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News