Friday, April 12, 2024

போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் கதைதான் ‘டாணாக்காரன்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் வெளியான படங்களின் டீஸரின் அதிமுக்கியத்துவம் பெற்றது ‘டாணாக்காரன்’ படத்தின் டீஸர்தான்.

பொதுவாக காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும், ரவுடிகளுக்கும் இடையில்தான் மோதல் நடக்கும். ஆனால் காவல் பயிற்சி கல்லூரியிலேயே அவர்களுக்கிடையே நடக்கும் மோதலை படம் பிடித்ததுபோல டீஸர் வெளிவந்தது சினிமா ரசிகர்களிடையே இத்திரைப்படம் பற்றி பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றி படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நாயர் நடித்திருக்கிறார். இவர் ‘நெடுநல்வாடை’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தமிழ், ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – சந்துரு, படத் தொகுப்பு – ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் – ராகவன், சண்டை இயக்கம் – சாம், நடன  இயக்கம் – ஷெரீப், தயாரிப்பு நிர்வாகம் – ராஜாராம், சசிகுமார், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிறுவனம் – பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான தமிழ் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

இந்த ‘டாணாக்காரன்’ படம் குறித்து இயக்குநர் தமிழ் பேசும்போது, “கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு. வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும்.

எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு படமாகவும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

மன  ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்புக் கொடுத்து நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படம் விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ள டீசரை பாராட்டி சினிமா துறையினரும், ரசிகர்களும் படக் குழுவை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News