‘ஜப்பான்’ படத்தின் டீசர்! கார்த்தியை பாராட்டிய சூர்யா

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி – அனு இமானுவேல் ஜோடியாக நடிக்கும் படம் ‘ஜப்பான்’.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  இந்நிலையில் பட டீசரை படக்குழு வெளியிட்டது.

‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா, “டீசர் சிறப்பாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.