Friday, April 12, 2024

உருவாகுமா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கைப் படம்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இப்போதைக்கு அனைத்து மொழிப் படங்களிலும் ஒருமித்தக் கதையோட்டமாக இருப்பது பிரபலமானவர்களின் வாழ்க்கைக் கதையைப் படமாக்குவதுதான்.

பூலான் தேவியில் துவங்கி டோனி, ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி, மில்கா சிங், தங்கல், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், நீரஜா, பான் சிங் தோமர், நேதாஜி, சரப்ஜித், சர்தார் வல்லபபாய் பட்டேல், கமலா சுரைய்யா என்று பல்வேறு முக்கியப் பிரமுகர்களின் வாழ்க்கைக் கதைகளும் படமாக்கப்பட்டுவிட்டன.

இந்த வரிசையில் படமாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ஆசை யாருக்குமே வரவில்லையா..?

வந்ததாம் இ்ந்தியாவின் மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு. அந்த நிறுவனத்தின் சார்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

அப்போது ரஜினி அவர்களிடத்தில் சொன்னது, “நான் ரெடிதான். ஆனால், அந்தப் படத்தின் இயக்குநர் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது என்னுடனேயே இருக்க வேண்டும். எனக்கு நினைவு வரும்போதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்ததை ரீவைண்ட் செய்து நான் சொல்லும்போதெல்லாம் அவர் எழுத வேண்டும்.

மகாத்மா காந்தியாரின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தைப் படித்தபோது இப்படியெல்லாம் ஒரு மனிதன் வெளிப்படையாக எழுத முடியுமா..? வாழ்ந்திருக்க முடியுமா என்கிற எண்ணம் எனக்குள் வந்தது. அதேபோல் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து நல்லது, கெட்டதுகளையும் ஒளிவுமறைவில்லாமல் நான் வெளிப்படுத்துவேன். அவற்றையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டாராம் ரஜினி.

கடைசியாக அவர் கேட்டது இந்தப் படத்திற்கான சம்பளமாக இதுவரையிலும் தான் வாங்காத மிகப் பெரிய சம்பளத்தைத்தான்..! “இது முழுக்க, முழுக்க என்னுடைய படம். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இருக்கப் போவது நான்தான். அதனால் இந்தச் சம்பளம் எனக்கு நியாயமானதுதான்..” என்று சொன்னாராம் ரஜினி.

இந்தப் பண விவகாரம்தான் அந்தப் பட நிறுவனத்தை சற்று யோசிக்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தற்போது கூட்டல், கழித்தல், வகுத்தெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பேலன்ஸ் ஷீட் இரு தரப்பினருக்குமே திருப்தியளித்தால் மிக விரைவில் அறிவிப்பு வரவும் வாய்ப்புண்டு..!

- Advertisement -

Read more

Local News