Friday, April 12, 2024

‘சுல்தான்’ வசூல் ரீதியாக வெற்றிப் படமானது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் வெளியான கார்த்தியின் சுல்தான்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மிகப் பெரிய வசூல் வேட்டையை ‘சுல்தான்’ மட்டுமே பெற்றிருப்பதாகத் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. தமிழில் விமர்சனங்கள் கலவையாக வந்திருந்தபோதிலும் சென்ற வார இறுதி நாட்களில் நகரத் தியேட்டர்களில் அனைத்து ஷோக்களுமே ஹவுஸ்புல்லாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. வெளியான முதல் நாளே தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கடந்த 5 நாட்களில் 1 கோடியே 87 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.

இந்த 5 நாட்களில் ஒட்டு மொத்த கலெக்சனாக 17 கோடியே 45 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது சுல்தான்’. அதே நேரம் தெலுங்கில் 4 கோடியே 60 லட்சம் ரூபாயையும், வெளிநாடுகளில் இருந்து 2 கோடியே 15 லட்சம் ரூபாயையும் கலெக்சன் செய்துள்ளது.

ஏற்கெனவே ‘சுல்தான்’ படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல், ஹிந்தி டப்பிங் உரிமம் எல்லாம் சேர்த்து 18 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தெலுங்கு பட உரிமை, டிவி, மற்றும் ஓடிடி உரிமத்துடன் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவிட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கான தியேட்டர் திரையிடுதலுக்காக 5 கோடிக்கு படம் விற்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. 10-ம் தேதி முதல் தியேட்டர்களில் 50 சதவிகிதம்தான் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அரசின் நிபந்தனையும் உள்ளது.

எனவே இந்த வாரத்திய வசூல் ‘சுல்தான்’ படத்திற்கு வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இந்த சுல்தான்’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்காவிட்டாலும் நிச்சயமாக வெற்றித் திரைப்படமாகத்தான் அமையும்.

- Advertisement -

Read more

Local News