சமந்தா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் மீம்ஸ்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா ஊடகங்களை நாயாக வர்ணித்திருக்கிறார்.

சமீப நாட்களாக நடிகை சமந்தா தனது கணவரும் தெலுங்குலகின் பிரபல நடிகரான நாக சைதன்யாவை விவகாரத்து செய்யவிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

ட்விட்டரில் தன் கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தன் திருமணத்திற்குப் பின்னால் சேர்த்துக் கொண்டிருந்த சமந்தா சென்ற மாதம் திடீரென்று அந்தப் பெயரை நீக்கியதால்தான் இந்த சந்தேகம் மீடியாக்களுக்கு எழுந்தது.

இதனால் தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். சமந்தா தற்போது தனது தோழி வீட்டில் இருக்கிறார். எனவேதான் அவர் ட்விட்டரில் பெயரை மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.

ஆனால் இந்த விவகாரம் குறித்து சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுவரையிலும் எந்தவிதக் கருத்தும் கூறவில்லை. பேசவில்லை.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய தனது மாமனார் நாகர்ஜூனாவுக்கு, “உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா” எனக் கூறி சமந்தா வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் இந்த வாழ்த்துக்கு சமந்தாவின் மாமனாரான நாகார்ஜூனா பதில் நன்றி சொல்லாமல் விட்டதினால் டைவர்ஸ் உறுதி போலும் என்று பல ஊடகங்கள் மீண்டும் தங்களது கருத்தை வெளிப்படுத்தின.

இந்நிலையில் ஊடகங்களை கலாய்க்கும்விதமாக மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும். அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா,

தனது விவகாரத்து பற்றிய செய்தியை வெளியிட்ட ஊடகங்களை விமர்சிக்கும்விதமாகவே அவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்ன இருந்தாலும் ஊடகங்களை நாய் வடிவத்தில் உருவகப்படுத்தி சமந்தா கூறியிருப்பது மீடியாக்களை ஒட்டு மொத்தமாக கேவலப்படுத்தியிருக்கும் செயல் என்று தெலுங்கு பத்திரிகையுலகத்தினர் வருத்தப்படுகிறார்கள்.