Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தீபாவளி கொண்டாட்டமாக  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில்,  வெளியான ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25, 2022 முதல்,  உலகமெங்கும் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் K V அனுதீப் உடைய தனித்துவமான இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் அனைவரையும் கவர்ந்தது.

ஒரு தமிழ் பையன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் எளிமையான கதை. அன்பு (சிவகார்த்திகேயன்), ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறான். அதே பள்ளியில், ஜெசிகா (மரியா ரியாபோஷப்கா) ஆங்கிலம் கற்பிக்கிறார்.

ஜாதிக்கு எதிரானவராக வாழும் உலகநாதன் ( சத்யராஜ்) தன் மகன் ஜாதியை விட்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். இந்நிலையில் ஜாதிக்கெதிராக மட்டுமல்லாமல் முற்றிலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அப்பா எதிர்க்க மாட்டார் என நினைக்கிறான் அன்பு. அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.  உலகநாதன் ஆங்கிலேயர்களால் தனது தந்தை கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ்காரர்களை முற்றிலுமாக வெறுக்கிறார். இதனால் தன் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்பு தனது காதலில் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் ‘ப்ரின்ஸ்’ படம்.

தீபாவளி வெளியீடாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழிய வைத்தது. தற்போது உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது.  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

Read more

Local News