Thursday, April 11, 2024

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அண்மையில் வெளியான ‘டான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’.

இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஜெஸ்ஸிகா’வும் வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 9-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

- Advertisement -

Read more

Local News