அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.இந்த திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். ‘குட்பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலை காணப்படுகிறது.இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயன், தனது நண்பர்களுடன் இணைந்து வாலி எழுதிய “ஓ சோனோ” என்ற பாடலை பாடி மகிழ்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் இயக்குநர் அருண்ராஜா காமராஜும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பின், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.