மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மாவீரன்’ படம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் படத்தின் தேங்கஸ் மீட் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “இப்படத்துக்கு அசரீரி குரலில் யாரை பேச வைக்கலாம் எனக் கேட்டபோது விஜய் சேதுபதியிடம் கேட்கலாம் என இயக்குநர் சொன்னார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு இயக்குநரிடம், அவர் குரல் பயன்படுத்தியதால் நானும் அவரும் இணைந்துவிட்டோம் என்று பின்பு நடிக்க முடியாமல் போய்விடக் கூடாது. அது எனக்கு ரொம்ப முக்கியம் என்றேன். அது வேற இது வேற என்று தான் என்னை சமாதானப்படுத்தினார். அவரோடு நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கு. அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும். அதற்கு இப்படம் ஒரு தொடக்கம் என்று நினைக்கிறேன்.
அவருக்கும் எனக்கும் போட்டியே கிடையாது. அவருடைய நடிப்பை அவ்ளோ ரசிப்பேன். இதை வார்த்தையாகத் தான் இதுவரை சொல்லிக்கிட்டே இருந்தேன். அதை நிரூபிக்கிற வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்தது. இரண்டு பேரும் சேர்ந்து நிரூபிச்சிட்டோம் என்று நினைக்கிறன். ஸ்க்ரீனில் சேர்வது சீக்கிரம் நடக்கும்” என்றார்.