1987 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”.. சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.
படத்தில், சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும். நீதிபதி சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதிதான் என உணர்ந்துகொள்வார்.
எனினும் சத்யராஜ்ஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என சிவாஜி கணேசன் தீர்ப்பு வழங்கிவிடுவார். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனும் சத்யராஜ்ஜும் மிக நெருக்கமாக பழகி வருவார்கள். பிறகு இருவரும் இணைந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்கப்போகிறார்கள் என்பதே மீதி கதை.
இதில் சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோர் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக இத்திரைப்படம் சத்யராஜ்ஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.
இந்த நிலையில் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் “இத்திரைப்படத்தை மீண்டும் தயாரிக்க இருக்கிறேன். இதில் சிவாஜி கணேசன் நடித்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். சத்யராஜ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் தேர்வானதும் படப்பிடிப்பு துவங்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more