பெரிய வீடு கட்டாதே!: பாரதிராஜாவிடம்  சிவாஜி  சொன்னது ஏன்? 

கதை சொல்லி, பவா செல்லதுரை சமீபத்தில் ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

“மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சிவாஜி கணேசன். அவரை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா சென்றார்.

அப்போது சிவாஜி, ‘அன்று மதியம் சாப்பிட்ட பிறகு நெஞ்சு அடைத்தது.   பிரபு, ராம் என கத்தி கத்தி கூப்பிட்டேன். ஆனால் ஒருத்தரும் வரவில்லை. அதனால உதவிக்கு யாரையாவது அழைத்தால், அவர்கள் வரும் அளவிற்கு சிறிய அளவில் வீட்டை கட்டு. பெரிய வீடாக கட்டாதே’ என்றார் சிவாஜி” என்று கூறினார் பவா.