Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உலக சினிமாக்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் உத்தி. இதுபோன்ற பல திரைப்படங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது.. இந்தியாவில்.. அதுவும் தமிழகத்தில்.. தமிழ்ச் சினிமாவில்.. கமர்ஷியல் நோக்கில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் டிராமா.

இந்தப் படத்தில் நடிகர்கள் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா, வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா, மாஸ்டர் பிரவீன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைக்கதை, இயக்கம் – அஜு கிலுமுலா, ஒளிப்பதிவு – சினோஸ் சம்ஸூதின், இசை – பிஜிபால், ஜெயா கே.ஜோஸ், ஜெசின் ஜார்ஜ், படத் தொகுப்பு – அகில் அலியாஸ், பின்னணி இசை – பிஜிபால், பாடல்கள் – ஏகாதசி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – சேது, ஒலிப்பதிவு – ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஷ்வரன், நடன இயக்கம் – கே.கார்த்திக், ஒப்பனை – பினு அஜய், பாடகர்கள் – சூரஜ் சந்தோஷ், வேல்முருகன், எம்.கே.பாலாஜி.

இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில் நுட்ப ரிகர்சல் செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் அஜூ பேசும்போது, “கிஷோர், சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததினால்தான் இந்தப் படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது.

ஒரே  ஷாட்டில் முழு படத்தையும் படமாக்குவது எளிதல்ல…  அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவினரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அர்ப்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இதுவொரு புது அனுபவத்தைத் தரும்…” என்கிறார்.

- Advertisement -

Read more

Local News