Wednesday, February 24, 2021
Home சினிமா செய்திகள் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ‘சில்லு வண்டுகள்’ திரைப்படம்

குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ‘சில்லு வண்டுகள்’ திரைப்படம்

சரண்யா 3-D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் ‘சில்லு வண்டுகள்.’

இந்தப் படத்தில் சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள், முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர்.

மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட்   பிரகாஷ்  ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  –  R.S.விக்னேஷ், இசை  – தேனிசை தென்றல் தேவா, பாடல்கள் – கவிமணி, படத் தொகுப்பு  – காளிதாஸ், கலை இயக்குநர் – ஜெயகுமார், நடன இயக்கம் – அஜெய் காளிமுத்து, சண்டை இயக்கம்  – கஜினி குபேரன், இணை தயாரிப்பு – மா.குமார் பொன்னுச்சாமி, தயாரிப்பு  –  தி.கா.நாராயணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  – சுரேஷ் K.வெங்கிடி.

படம் பற்றி இயக்குநர் சுரேஷ் K.வெங்கிடி பேசும்போது, “இது முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை கொண்டு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதைவிட பாடம் என்றுதான் சொல்லவேண்டும்.

வாழ்க்கையில் அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டத்திற்கு வளர வேண்டும் என்றால் அதற்கு தவறான வழிகளை பின்பற்றக் கூடாது என்பதை இதில் ஆழமாக சொல்லியிருக்கிறோம். அப்படி தனது தம்பிக்காக கெட்ட வழிகளை தேர்ந்தெடுக்கும் ஒரு அண்ணனின் கதை இது.

இந்தப் படம் குழுந்தைகளுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மன நிலையில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினைகள்  இருக்க கூடாது.

அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், உதவி செய்யும் எண்ணமும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை இன்றைய குழுந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்தே இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

நடித்த அனைவரும் குழந்தை நட்சத்திரங்கள் என்பதால் அவர்களை வைத்து காட்சிகளை படமாக்க மிகவும் சிரமமப்பட்டோம்.

இந்த படத்தின் கதையை தேனிசை தென்றல் தேவா அவர்களிடம் சொன்னபோது குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம் அதனால் நான் இசையைக்கிறேன் என்றார். அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்களை பிரம்மாதமாக தந்திருக்கிறார் தேவா.

தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் குழந்தைகளுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார் இயக்குநர் சுரேஷ் K.வெங்கிடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை...

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி’. தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளிலும்...

மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது. இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது....