கடைசிவரை நிறைவேறாத சிவாஜியின் ஆசை!

நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். அவர் நடிக்காத வேடமே இல்லை எனலாம். அப்படிப்பட்டவரின் நடிப்பு ஆசை ஒன்று நிறைவேறாமலே போய்விட்டது.

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது இயக்குனர் மணிரத்தினமும் ஹார்ட் பிரச்சனையால் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டு இருந்தார்.

இதை கேள்விப்பட்ட சிவாஜி மணிரத்னத்தின் மகன் நந்தனை சந்தித்து பேசி இருக்கிறார். பொதுவாக சில விஷயங்களை பேசிய அவர் திடீரென, ‘உன் அப்பாவிடம் சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுடா’ என்று கேட்டிருக்கிறார். இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த நந்தன் தன் அப்பாவிடம் இதை அப்படியே கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட மணிரத்தினம், ‘சிவாஜி போன்ற ஒரு ஜாம்பவானை வைத்து படமெடுப்பது என் பாக்கியம். விரைவில் அவருக்கான கதையை தயார் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே சிவாஜி இறந்து விட்டார். அந்த வகையில் நடிகர் திலகத்தின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

இதையடுத்து மணிரத்னம், ‘சிவாஜி மட்டும் இன்னும் வாழ்ந்திருந்தால், யாரும் இதுவரை பார்க்காத ஒரு கேரக்டரில் வேறு மாதிரி காட்டி இருப்பேன்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.