ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்!

இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர்போனவர். ஆனால் அவரது பட விமர்சனம் ஒன்று அவரை மிகவும் பாதித்ததாம்.

இது குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருக்கிறார்.

“ அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பெற்றார்.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இதில் நடித்த அனைவருமே புது முகங்கள் தான். இக்கதை ஆறு இளைஞர்களின் பருவ வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளை  மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. குறிப்பாக,  பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒரு விமர்சனம் எழுதியதை ஷங்கரால் மறக்கவே முடியாது.

ஒற்றை வார்த்தையில் ” சீ ” என்று விமர்சனம் கொடுத்தது.  இதுதான் அவரால் மறக்க முடியாத விமர்சனமாக அமைந்துவிட்டது” என்றார் பத்திரிகையாளர் மணி.