இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம்தான். அவரே, ‘இவ்வளவு செலவு தேவையா’ என ஆத்திரமானார் என்பது ஆச்சரிய செய்திதானே.
பிரபல கேமராமேன் மனோஜ், சமீபத்தில் யு டியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இதைத் தெரிவித்தார்.
அவர், “ஷங்கர் தயாரிப்பில் அறிவழகம் இயக்க, ஆதி, நந்தா, சிந்துமேனன் நடித்து வெளியானது ஈரம் திரைப்படம். இதற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். அப்போது சில சமயங்களில், ஷங்கர், ‘இவ்வளவு செலவு தேவையா’ என ஆத்திரமடைந்தது உண்டு. ஆனால், செலவுக்கான காரணத்தைச் சொன்னதும் சமாதானம் ஆகிவிடுவார்” என்றார்.