Thursday, April 11, 2024

“ஆதி புருஷ்’ படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும்” – மத்தியப் பிரதேச அமைச்சர் எச்சரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஆதி புருஷ்’.

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக் குழவினர் சமீபத்தில் அயோத்தியில் வெளியிட்டனர்.

டிரெயிலரை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நடிகர்கள் அனைவரும் பொம்மை போலவே காட்சிப்படு்த்தப்பட்டிருப்பது போலவும், சோயாபீம் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் போல இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படு்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல அரசியல்வாதிகளிடமிருந்தும் இந்தப் படத்திற்கு எதிர்ப்புக் குரல் வந்துவிட்டது. மத்திய பிரதேச உள்துறை மந்திரியான நரோட்டம் மிஸ்ரா ஆதி புருஷ் படத்திற்குத் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

அவர் இது குறித்து பேசும்போது, “ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை நான் பார்த்தேன்.அதில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் அனுமன் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார். டிரெய்லரில் காணப்பட்ட இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இவை. இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்து மத அடையாளங்களை தவறான முறையில் காட்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News