Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இந்திய நடிகையான சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11-ம் தேதியன்று வெளியாகிறது.

ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை: மணிஷர்மா, வசனம்: புலகம் சின்நாராயனா, Dr. செல்லா பாக்யலஷ்மி, பாடல்: ராமஜோகியா சாஸ்த்ரி, கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜஸ்தி, கேமரா: M. சுகுமார், கலை: அஷோக், சண்டைப் பயிற்சி: வெங்கட், யானிக் பென், படத் தொகுப்பு: மார்தாண்ட். K.வெங்கடேஷ், லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: ரவிக்குமார் GP, ராஜா செந்தில், இயக்கம்: ஹரி மற்றும் ஹரிஷ், தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர்: ஸ்ரீதேவி மூவிஸ்.

படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “இந்த ’யசோதா’ படம் இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள்.

இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம்.

இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். வரும் நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News