மணிரத்தினம் படத்தில் நடிக்க மறுத்த சமந்தா!

மணிரத்தினம் படம் என்றாலே பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த வாய்ப்பை சமந்தா நிராகரித்திருக்கிறார். கடல்  படத்தில் கதாநாயகியாக சமந்தாவை தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவு செய்திருந்தார். இதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் தொடங்கியது.

அப்போது சமந்தா  Polymorphic Light Eruption என்ற தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடிவில்லை. இதைச் சொல்லி விலகிவிட்டார்.

அதற்கு பிறகு தான் நடிகை ராதாவின் மகள் துளசி நாயர் நடித்தார். ஆரம்பத்தில் ஆடிஷனுக்கு எல்லாம் துளசி நாயர் சென்றிருந்தார். ஆனால், இயக்குனர் சமந்தாவை தான் முடிவு செய்திருந்தார்.