நடிகர் மிர்ச்சி சிவா நேற்றைக்கு தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.
2012-ம் ஆண்டு சிவா, விமலுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வணிக ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியடைந்தது.
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெற்றி படமான ‘தில்லு முல்லு’ மறுபதிப்பில் சிவாவுடன், ஈஷா தல்வார் ஜோடி சேர 2013-ம் ஆண்டு சிவாவின் தனி நாயகனுக்கான முதல் படமாக அமைந்தது.
இதில் சிவா மட்டுமே முழு படத்தையும் தன் தோளில் சுமக்கும் அளவுக்கு தன் முழு திறமையையும் வெளிபடுத்தியிருந்தார் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
இதே ஆண்டு வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தில் பிண்னனி பேசும் கலைஞராக நடித்திருந்தார். இறுகிய முகத்தை வைத்து கொண்டு இவ்வளவு அழகாக காமெடி செய்வதில் சிவாவை மிஞ்ச ஆள் இல்லை, சிவா ஒரு வேடிக்கையான மனிதர் அதை தவிர வேறொன்றும் முக்கியமில்லை என்று பத்திரிகைகள் சிவாவை பாராட்டித் தள்ளின.
சிவாவின் அடுத்த வெளியீடான ‘யா யா’-வில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிவாவின் அடுத்த படமான ‘வணக்கம் சென்னை’-யில் பிரியா ஆனந்துடன் ஜோடி சேர கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
அடுத்து ஒரு வருடம் கழித்து பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘மசாலா’ படத்திற்கு நேர்மறை விமர்சனமும், சிவா நடிப்புக்கு பாராட்டும் கிடைத்தது.
2007 ல் மிகப் பெரிய வெற்றியடைந்த ‘சென்னை-600028’-ன் இரண்டாம் பாகத்திலும் சிவா நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் நடிப்பில் ‘சுமோ’, ‘சலூன்’ என்ற புதிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
இதில் ‘சலூன்’ படத்தின் புதிய போஸ்டர் சிவாவின் பிறந்த நாளையொட்டி நேற்றைக்கு வெளியானது..!