Wednesday, April 10, 2024

விமர்சனம்: சலார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ்  கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும்  பான் இந்தியா திரைப்படம் சலார். பாகுபலி, கே.ஜி.எஃப் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

சலார்  எப்படி இருக்கி? உயிருக்கு உயிரான நண்பன் மீது ஒரு அளவு கடந்த பாசம். தன்னைப் பெற்ற தாய் மீது அதீத பாசம். இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் யார் பக்கம் சலார் பிரபாஸ் நிற்கிறார் என்பதே சலார் பட முதல் பாகத்தின் கதை. இந்தியாவில் தன் அம்மாவின் அஸ்தியை கரைக்க வெளிநாட்டில் இருந்து வருகிறார் நாயகி சுருதிஹாசன்.

மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் இவரை கொல்ல முயற்சி செய்கி றது. முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்போடு கொலை முயற்சி நடக்கிறது.  அவர்களிடமிருந்து  காப்பாற்றி சுருதிஹாசனை பிரபாஸிடம் ஒப்படைக்கிறார் மைம் கோபி.

அம்மா பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாயகன். தாய் ஈஸ்வரி ராவின் சொல்லுக்கிணங்க  எந்த அடிதடிக்கும் செல்லாமல் சாதுவாக இருக்கிறார் நாயகன் பிரபாஸ்.  சுருதிஹாசனை கொல்ல வரும்போது தாய் சொன்ன பிறகு எதிரிகளை  அடித்து துவம்சம் செய்து காப்பாற்றுகிறார். இதைக் கேள்விப்பட்ட வில்லனாக வரும்  பிரித்விராஜ் கும்பல், பிரபாஸை துவம்சம் செய்ய அவர் வீட்டுக்கு வருகின்றனர்.

மிகப் பெரிய வீரனாக இருக்கும்  பிரபாஸ் ஏன் தன் தாயின் கட்டுப்பாட்டிற்குள் சாதுவாக இருக்கிறார்? இவருக்கும் அவருடைய நண்பர் பிரித்விராஜுக்கும் இருக்கும் உறவு என்ன? என்பதே சலார் படத்தின் மீதி கதை .அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதிரடி ஆக்‌சன், பாசம் என பிரம்மாண்ட படமாக முதல் பாதி இருக்கிறது.

இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன அதில் பிரபாஸுக்கும் பிரித்வி ராஜுக்குமான நட்பு, அதன் பிறகு ஏற்படும் பகை, மோதல், அடிதடி சண்டை பழிவாங்கல் என படம் நீள்கிறது. சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த வைக்கிறார் இயக்குனர்.

பிரபாஸின் நடிப்பு  அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மாஸாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெருகிறார்.

பிருத்விராஜ் எதார்த்தமான நடிப்பில் மனதில் நிற்கிறார்.

பாகுபலிக்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு சலார் படம் மூலம் திரும்பி இருக்கிறார் பிரபாஸ். படம் முழுவதும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் பிரபாஸ். நாயகியாக வரும் சுருதிஹாசன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்துகிறார் ஈஸ்வரி ராவ்.

வில்லனாக வரும்  பிரித்விராஜ் பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒரு சில  காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார் மைம் கோபி. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், கருடா ஆகியோர் படத்திற்கு தகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் அருமை.

அதிரடி ஆக்சன், பாசம், நட்பு என ரசிகர்கள் விரும்பும் கதைக்களத்துடன் வெளியாகி விருந்து வைத்திருக்கிறது சலார்.

 

- Advertisement -

Read more

Local News