வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் தயாரிக்கும் ‘தி ஸ்டிங்கர்’ படத்தை ஹரி எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பை எம்.எஸ். காமேஷ் கவனிக்க, ஒளிப்பதிவை சபரி மேற்கொள்கிறார்.
இயக்குனர் ஹரி இப்படம் குறித்து பேசும்போது, “சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் வகை படமாக உருவாகிறது. உலகத் தரத்துக்கேற்ப தொழில்நுட்பத்துடன் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
ஏலியன்களோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களுக்கு சிறந்த பார்வை அனுபவத்தைத் தரும். அனிமேஷன் பணிகள் முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது” எனத் தெரிவித்தார்.