Friday, April 12, 2024

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

ராம் சரண், ஜூனியர் NTR, அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோரின் நடிப்பில் உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் எதிர்பாராதவிதமாக கொரோனா தாக்கம் அதிகரிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டு மற்ற காட்சிகளுக்கு 50 சதவிகித இருக்கையுடன் செயல்பட அரசு அனுமதியளித்தது.

மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 50 சதவிகித இருக்கை நிபந்தனையுடன் வெளியானால் கண்டிப்பாக அதன் வசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்ட படத்தின் தயாரிப்பாளர்கள் ஆர்.ஆர்.ஆர்.’ பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

படம் ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியை படக் குழு தற்போது அறிவித்துள்ளது.

அதாவது இந்தியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தால், திரையரங்குகளில் முழு அளவிலான பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கும்பட்சத்தில்
ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மார்ச் 18-ம் தேதி அல்லது ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News