சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தாக்கூர் அனூப் சிங். இவர் தற்போது “ரோமியோ எஸ்3” என்ற ஆக்சன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பலக் திவாரி நடிக்கிறார்.பென் ஸ்டுடியோஸ் மற்றும் வைல்ட் ரிவர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை குட்டு தனோவா இயக்குகிறார். இப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், நடிகை பலக் திவாரியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
