Wednesday, September 18, 2024

திரை விமர்சனம்: அநீதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் அர்ஜுன் தாஸ். அந்த வேலையில்  அவர் சந்திக்கும் அவமானங்களும், சாக்லேட் மற்றும் அது குறித்த விளம்பரங்களும் அவரை மன ரீதியாக பாதிக்கின்றன.  இதனால், யார் அவரை கோபப்படுத்தினாலும்  கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில்  தோன்றுகிறது. இதற்காக உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.

இன்னொரு பக்கம்,  ஒரு பணக்கார வீட்டில் தனியாக இருக்கும் முதிய பெண்மணிக்கு வீட்டு வேலை செய்கிறார் துஷாரா விஜயன். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது.

இதற்கிடையே ஒரு மரணம் இவர்களது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.கதையின் நிஜ நாயகன் அர்ஜூன் தாஸ்.
தன்னை இழிவு படுத்துபவர்களை, கற்பனையாக கொலை செய்து, இயல்பு வாழ்க்கையில் அமைதியானவராக அற்புதமாக நடித்து இருக்கிறார். காதல் உணர்வை வெளிப்படுத்துவதாகட்டும், பணிச்சுமையை கண்களில் காட்டுவதாக இருக்கட்டும், இறுதியில் ஆத்திரத்துடன் பழிவாங்குவதாகட்டும்… சிறப்பான நடிப்பு.

உலகினில் கோபப்பட்டு எதிர்வினையாற்றுபவராகவும் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

துஷாரா விஜயனும் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார். குறிப்பாக காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும், வீட்டு எஜமானிக்கு பயப்படும் காட்சியிலும் மனதில் பதிகிறார்.பணக்காரத் திமிர் கொண்ட முதிய பெண்மணியாக வரும் சாந்தா தனஞ்சயன், மிரட்டுகிறார்.

 

பிளாஷ்பேக்கில் காளி வெங்கட்,. அவரது மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ரெனிஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம்,ஷாரா, பரணி, அப்துல் லீ ஆகியோர் நடிப்பு செயற்கையாகப்படுகிறது. ஒருவேளை, இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி அமைப்ப நாடகத்தன்மையாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இரண்டு பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. குறிப்பாக பின்னணி இசை, கதையுடன் இணைந்தே வருகிறது. அற்புதம்.

குறிப்பாக  காதல் காட்சியிலும், அர்ஜுன் தாஸ் உடைந்து அழும் காட்சியிலும் நெகிழ வைக்கிறது பின்னணி.ஏ.எம்.எட்வின் சாக்கேவின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

வசனங்கள் ஈர்க்கின்றன. “கைகூப்பி மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுஷனே இல்ல” என்ற வசனம் ஒரு துளி.

அதே நேரம், “மழை நேரத்துல துண்டு கொடுத்த கை, முதலாளியுடையதாக இருக்காது” என்கிற வசனம் வலிந்து திணிக்கப்பட்டதாக தோன்றுகிறது. உதவிக்கரம் நீட்டும் முதலாளிகளும், கையை இறுக்கி மூடிக்கொள்ளும் தொழிலாளும் உண்டு.

முகம் பார்க்காமலேயே உருவாகம் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களின் போராட்டத்தை  காண்பித்தது சமூக அக்கறை. ஆனால் கதையில் வலிந்து திணித்தது போல இருக்கிறது.

தவிர, தொழிலாளியை அடிமைப்படுத்தும் முதலாளித்துவ குணம், காவல்துறையின் கொடூரம், மனநல மாறுபாடு என பல விசயங்களை ஒரே படத்தில் திணித்தது போல இருக்கிறது.இதனால் குழப்பம் ஏற்படுகிறது.
குறிப்பாக, நாயகனின்  அதிரடி முடிவுகளுக்கு மனப்பிரச்சினை காரணமா, பணி அழுத்தம் காரணமா என்பதை புரியும்படி சொல்லவில்லை.

தவிர இடைவேளைக்குப் பிறகு படம் நாடக பாணியில் சென்று விடுகிறது. ஆகவே படத்தில் ஒன்ற முடியவில்லை.

 

 

- Advertisement -

Read more

Local News